வீட்டு சமையல் எரிவாயு மற்றும் வணிக சமையல் எரிவாயு கொள்கலன்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை வினைத்திறனாக முன்னெடுப்பதற்காக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில் நாளாந்தம் சுமார் 90,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.