கண்டி – ரஜ வீதியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அஹெலேபொல அரண்மனையின் புனரமைப்புப் பணிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (06) பார்வையிட்டார்.
பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிறைக்கூடமாக விளங்கி, பின்னர் விளக்கமறியல் சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கட்டிடம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
வரலாற்று முக்கியத்துவமிக்க இந்தக் கட்டிடத்தின் புனரமைப்புப் பணிகள் அனைத்தும், பழங்கால அரண்மனைத் திட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் புனரமைப்புப் பணிகளை வெகு விரைவில் பூர்த்தி செய்யுமாறு, ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.