இந்தியா பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், தனக்கு 11 முறை கொவிட் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறியதால், மாநில சுகாதாரத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12-வது முறையாக ஊசி செலுத்துவதற்கு முயற்சித்த போது அவர் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
சுகாதார ஊழியர்களை ஏமாற்றுவதற்காக அவர் தனது நெருங்கிய உறவினர்களுடைய வெவ்வேறு அடையாள அட்டைகள் மற்றும் கைபேசி எண்களைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அஞ்சல் துறையின் ஓய்வு பெற்ற ஊழியர் எனக் கூறிக்கொள்ளும் அவருடைய கூற்றுப்படி, பிப்ரவரி 13,2021 அன்று அவருக்கு முதல் டோஸ் ஊசி போடப்பட்ட பிறகு, அவர் மார்ச், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா ஒரு டோஸ் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகின்றன.
செப்டம்பரில் அவர் தன்னுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களைப் பயன்படுத்தி 3 டோஸ்களைப் பெற்று, டிசம்பர் 30, 2021-க்குள் அவர் 11 டோஸ்களைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
உண்மையைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாதேபுரா சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அம்ரேந்திர பிரதா ஷாஹி கூறியுள்ளார்.