டிக்டொக் வீடியோ தொடர்பில் ஏற்பட்ட முறுகல் காரணமாக 17 வயது இளைஞனை கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 06 சிறுவர்கள் கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில் அவர்களை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று(05) உத்தரவிட்டுள்ளாா்.
குறித்த சிறுவர்கள் 12 தொடக்கம் 16 வயதுக்கிடைப்பட்டவர்கள் என கிராண்ட்பாஸ் பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.