follow the truth

follow the truth

January, 2, 2025
Homeஉள்நாடுதலதா மாளிகையில் ஜனாதிபதி மத வழிபாட்டில் ஈடுபட்டார்

தலதா மாளிகையில் ஜனாதிபதி மத வழிபாட்டில் ஈடுபட்டார்

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று  முற்பகல் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி, தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்காக வருகை தந்திருந்த பொதுமக்களும், ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்தனர்.

இதன்போது அந்த மக்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, அவர்களின் நலன் விசாரித்தறிந்து கொண்டார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

May be an image of 7 people, child, people standing and indoor

May be an image of 7 people and people standing

May be an image of 6 people and people standing

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அறிஞருமான ஜே. ஆர். பி.சூரியப்பெரும காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி...

கொழும்பு வந்தடைந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல்

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு...

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டமான காலநிலை காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்...