‘சுவ சவன’ எனப்படும் சுகாதார அமைச்சின் அவசர தொலைபேசி சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று கொழும்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெறவுள்ளது.
அதற்கமைய, 1907 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு தமது ஆலோசனைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும்.
தம்மிடம் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை, அதற்கு தேவையான வழிமுறைகளை கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அல்லது வேறு தொடர்பாடல் முறையில் அறியப்படுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.