கொவிட்-19 இன் புதிய மாறுபாடு அண்மையில் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா, ஒமிக்ரோன் வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றமடைந்து உருமாறியது.
IHU என பெயரிடப்பட்ட B.1.640.2 மாறுபாடு IHU மெடிட்டரேனி இன்ஃபெக்ஷன் நிறுவனத்தில் உள்ள கல்வியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடான கேமரூனில் இருந்து பிரான்ஸின் Marseille நகருக்கு வந்த 12 பேருக்கு இந்த புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒமிக்ரோனை விட இது 46-க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகை கொரோனா இதுவரை மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.