கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
—————————————————[UPDATE]
துமிந்த நாகமுவ கைது
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொரளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவலை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.