மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடத்துமாறு எந்தவொரு வௌிநாட்டின் அழுத்தமும் நாட்டிற்கு இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.