நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை சீர்செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதனை, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச ஊடகவியலாளர் சந்திப்பின் போது உறுதி செய்தார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரமன்றி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் பொருளாதாரத்தை சீர்செய்வதற்கான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.