follow the truth

follow the truth

November, 30, 2024
Homeஉள்நாடுபாரிய கொவிட் அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் : இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்...

பாரிய கொவிட் அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் : இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை!

Published on

நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் , மக்களின் பொறுப்பற்ற விதத்திலான நடவடிக்கைகளினால் எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொவிட் அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி பெற்றுக் கொள்ளல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பவற்றின் மூலமாகவே இந்த அபாயத்திலிருந்து மீள முடியும்.

முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் , மேற்கூறப்பட்ட அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அத்தியாவசிய மானதாகும். இதன் மூலமே எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஒமிக்ரோன் பிறழ்வானது டெல்டாவை விட வீரியம் குறைவானதாகக் காணப்பட்டாலும் , வேகமாக பரவும் திறனைக் கொண்டுள்ளது. இதனால் தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிக்கும் போது வைத்தியசாலை கட்டமைப்புக்களும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். வைத்தியசாலை ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகி அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால் மருத்துவ சேவையும் மந்தமடையும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற குற்றச்சாட்டின்...

புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கும் புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360...