நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இதுவரை ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டின் மூன்று மாவட்டங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் தொற்றாளர்களை வீடுகளில் பராமரிக்கும் பிரிவின் பிரதானியான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு, கம்பஹா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒமிக்ரோன் தொற்றினால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் அறிந்து, சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.