தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதுடன் இம் மாத இறுதிக்குள் புதிய மென்பொருள் மற்றும் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இந்த பணி நிறைவடைந்ததும், முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பொது இடங்களுக்கு பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.