எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் சேவை கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என சில பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
நியூஸ் ரேடியோவிற்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா, பெற்றோர்களுடன் கலந்துரையாடி பாடசாலை வேன் கட்டணத்தை உரிய தொகையால் அதிகரிக்குமாறு சங்க உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.