பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்று மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தேவைக்கு ஏற்ப மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பேருந்துகளின் இருக்கைகளுக்கு கூடுதலாக அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பேருந்து சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, புகையிரத சேவையும் எவ்வித தடையுமின்றி இயங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.