ஓமானில் விட்டு பணியாளர்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 16 இலங்கை பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 இலங்கை வீட்டுப் பணிப்பெண்களே நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் இரத்தினபுரி, பதுளை, கண்டி, குருணாகல், சிலாபம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மேலும் 26 இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் இன்னும் ஓமானில் பாதுகாப்பான தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் தற்காலிக கடவுச்சீட்டில் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் எதிபார்க்கப்படுகிறது.