சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் நாளை(03) முதல் முதல் ஜனவரி 30 ஆம் திகதி வரை மூடப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாட்டிற்கு தேவையான மசகு எண்ணெய் கொள்வனவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.