மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலகுவதற்கும் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நாங்கள் பதவிகளுக்கு பயந்து பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக வேலை செய்பவர்கள் இல்லை, பதவிகளை விட்டு விலக வேண்டுமாயின் அதற்கும் தயாராக இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.