மலர்ந்துள்ள புத்தாண்டில் சுகாதார அமைச்சு நாட்டு மக்கள் அனைவரிடமும் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
இந்த ஆண்டில் நாட்டை முடக்காது இயல்பு நிலையில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் மக்கள் சுகாதார வழிமுறைகளை உச்ச அளவில் பின்பற்ற வேண்டுமென கோரியுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். நாட்டில் இதுவரையில் மொத்தமாக 49 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விடுமுறைக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென பொலிஸார் கோரியுள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 587245 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 14979 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.