follow the truth

follow the truth

November, 30, 2024
Homeஉள்நாடுஇன்று விசேட பாதுகாப்பில் ஈடுபடும் பொலிஸார்!

இன்று விசேட பாதுகாப்பில் ஈடுபடும் பொலிஸார்!

Published on

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் பொலிஸார் இன்று விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

காலி முகத்திடலில் விசேட இடத்தில் வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிகளை மீறுபவர்க்ள மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் நபர்களை தேடுவதற்காக கொழும்பில் பல்வேறு இடங்களில் புலனாய்வு அதிகாரிகளை நியமிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் நிரந்தர மற்றும் அவ்வப்போது விசேட வீதி தடுப்புகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கரையை கடக்கும் புயல் – மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு அவர்களின்...

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...