முதல் தடவையாக நியூஸிலாந்தின் மௌவ்ரி பழங்குடியின இனத்தைச் சேர்ந்த, ஓரினி கைபாரா என்ற செய்தியாளர் ஒருவர், தமது பாரம்பரிய முக அடையாளங்களுடன் நியூசிலாந்தின் தேசிய தொலைக்காட்சியில் பிரதான செய்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
இதனை பலரும் மௌவ்ரி பழங்குடியினத்தின் பிரதிநிதித்துவத்திற்கான வெற்றி என்று பாராட்டியுள்ளனர்.
இது, தனக்கும் தமது இனத்துக்கும் கிடைத்த பெரிய மரியாதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
நியூசிலாந்தில் உள்ள பழங்குடியின மக்களான மௌவ்ரி மக்களின் பாரம்பரியத்தில், பெண்களுக்கு முக அடையாளங்களாக கன்னங்களில் பச்சை குத்தப்படுகின்றன.இது ‘மோகோ” என்று அழைக்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஆண்களுக்கு அவர்கள் முகத்தின் பெரும்பகுதியை மூடி, மாடோரா என்ற பெரியல் பச்சைக்குத்தப்படுகிறது.
இந்தநிலையில் 2021 ஜனவரியில் தாம் ஒரு மௌவ்ரி பெண்ணாக தனது சக்தி மற்றும் அடையாளத்தை நினைவூட்டுவதற்காக, பச்சைக்குத்திக்கொண்டதாக ஓரினி கைபாரா தெரிவித்துள்ளார்.
2005 இல் தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கிய கைபாரா, பிரதான செய்தியை தொகுத்து வழங்குவது தனது செய்தித்துறை கனவுகளின் “உச்சம்” என்று கூறியுள்ளார்.