எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்படும் என மதுவரி திணைக்களம் உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் , 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள முழு சந்தையிலும் விற்கப்படும் அனைத்து மதுபான போத்தல்களுக்கும் இந்த பாதுகாப்பு ஸ்டிக்கரை ஒட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.