இறப்பர், தென்னை, கறுவா ஏற்றுமதியூடாக இந்த வருடம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை வரலாற்றில் பதிவான மிக கூடுதலான ஏற்றுமதி வருமானம் இதுவாகும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்டமையால், பெருந்தோட்டத்துறையும் விவசாயமும் பாரிய அளவில் சவால்களை எதிர்நோக்கியதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், சில பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்ட நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் தேவையான இரசாயன உரம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.