எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக எரிவாயு விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அனைத்து எரிவாயு சிலிண்டர்களிலும் இருக்கும் எரிவாயு குழாய்களை (நொப்களை) மாற்றி புதிய குழாய்களைப் பொருத்த முடிவு செய்துள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
சிலிண்டர்களில் புதிய குழாய்களை மாற்றி சந்தையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதனால், சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ,நுகர்வோர்கள் விரைவில் எரிவாயுவை கொள்வனவு செய்வதை இலகுவாக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை எரிவாயு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தோடு இஎதிர்காலத்தில் எரிவாயு இறக்குமதியை சோதிக்கும் அதிகாரம் மற்றும் தரநிர்ணய நிறுவனம் பயன்படுத்தும் முறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.