follow the truth

follow the truth

December, 22, 2024
Homeஉள்நாடுகைதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கைதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

Published on

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள 18,453 கைதிகளுக்கு மூன்றாவது கட்ட தடுப்பூசியாக பைசர் வழங்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் நிர்வாக மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெலிக்கட, மெகசின், கொழும்பு ரிமாண்ட், வடரெகா, மஹர மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளுக்கு கைதிகளுக்கு இன்று (29) மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் மூன்றாவது கட்ட தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த ஆண்டு, பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பு மேல் மாகாணத்தில்..

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக...

சில இடங்களில் மழை

இன்று (22) மாலை அல்லது இரவில் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மற்றும்...

வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய...