திரவ பாலை பொதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்கு அரசாங்கம் 5% வரி விதிப்பதால் உள்ளூர் திரவ பால் தொழில்துறை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.
திரவ பால் மீதான வரியை நீக்குமாறு அரசாங்கத்திடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், திரவப் பாலின் விலையை அதிகரிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதும் , திரவப் பாலின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை என தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.
டொலர் நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி பால் நிறுவனங்கள் பயன்படுத்திய பொதிகளும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதோடு அவற்றில் சில அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளன.
சுமார் 30,000 டொலர் பெறுமதியான பொதிகள் தேசிய கால்நடை சபையின் தலையீட்டின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளாா்.