2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02 ஆம் திகதி முதல் மே 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வௌியிடப்பட்டது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.