சிறி தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 24 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வசதிகளை வழங்கும் மேலும் 37 பாடாலைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(29) மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.