ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் இதுவரை தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இரண்டு அணிகளுமே 2 வெற்றிகளை மட்டும் பெற்று 4 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் முறையே கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இரு அணிகளுக்கும் மங்கிய நிலையில், இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.