பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்ததாவது,
பாகிஸ்தானுடனான வாகா எல்லையை உடனடியாக மூடப்படும் என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. விசா பெற்று இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்துக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவார காலத்துக்குள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகமும் மூடப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்டு வந்த எஸ்விஇஎஸ் (SVES) ரத்து செய்யப்பட்டது. சிந்து நதி பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. தூதரக உதவிகளைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடற்படை, விமானப்படை, பாதுகாப்புப் படையினர் இஸ்லாமாபாதில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிலுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படைப் படையினர் ஒருவாரத்துக்குள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முப்படைகளும் தயார்நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.