அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள் வழங்கப்பட்டதுடன் 2,250 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட்டது.
அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருளுக்கான ஒதுக்கீடு 700 லீட்டர் வரை குறைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.