ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளையும்(24) நாளை மறுதினமும்(25) வருகை தருவதை தவிர்க்குமாறு பொதுமக்களைக் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது குறித்த யாத்திரைக்காக கண்டி நகரில் ஏற்கனவே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வரிசையில் கூடியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.