follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP2இலஞ்சம் பெற்ற SLTB சிரேஸ்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது

இலஞ்சம் பெற்ற SLTB சிரேஸ்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது

Published on

இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், 100,000 ரூபாவை இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

திருகோணமலை-வவுனியா வழித்தடத்தில் இயக்கப்படும் திருகோணமலை டிப்போவிற்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணிகளின் டிக்கெட்டுகளை ஆய்வாளர்கள் சரிபார்த்த போது, பயணி ஒருவருக்கு டிக்கெட்டினை வழங்காமை தொடர்பில் பேருந்தின் நடத்துனராகப் பணியாற்றிய முறைப்பாட்டாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

இருப்பினும், சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி, முறைப்பாட்டாளருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விசாரணையை முடித்து, மீண்டும் பணியில் அமர்த்த 100,000 ரூபாயை இலஞ்சமாக கோரியுள்ளார்.

பின்னர் சந்தேக நபர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரி மூலம் பணத்தை கோரி பெற்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த இரு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளையும்(24) நாளை மறுதினமும்(25) வருகை தருவதை தவிர்க்குமாறு...

தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்காவுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

தீர்வை வரி விதிப்பு தொடர்பான அமெரிக்காவுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் இது தொடர்பிலான முடிவுகள் கூட்டு அறிக்கையாக வௌியிடப்படும்...

பிரதான பாதையில் ரயில் சேவையில் தாமதம்

கம்பஹா ரயில் நிலையம் அருகே ஒரு ரயில் தடம் புரண்டமை காரணமாக பிரதான பாதையில் ரயில் சேவையில் தாமதம்...