“சிறி தலதா வழிபாடு” நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைத் தரும் பக்தர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாளை(23) ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாளைய (23) “சிறி தலதா வழிபாடு” நிகழ்வில் பங்கேற்பதற்காக, இன்று (22) மாலை 6:00 மணியளவில் 80,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டி நகரில் ஒன்று கூடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளை காலைக்குள் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில். நாளைய தினம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகையைக் கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அமைதியான அனுபவத்தை உறுதி செய்யவும், நாளைய தினத்தை தவிர்த்து அடுத்தடுத்த நாட்களில் பங்கேற்பதன் மூலம் பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி வழிபாட்டை மேற்கொள்ள முடியும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.