follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP2ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் வளமான நாடு சீரழிகிறது - சஜித்

ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் வளமான நாடு சீரழிகிறது – சஜித்

Published on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் இன்று வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கும் நடவடிக்கை சீரழிந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டி இருந்தார்.

மேலும், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் பொய் மற்றும் ஏமாற்று வேலைகளை செய்து மக்களை ஏமாற்றிய போதாக்குறைக்கு தற்போது உள்ளூராட்சி தேர்தலிலும் அதனையே முன்னெடுத்து கிராமத்தில் தமது பொய்யர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத் தருமாறு கோரி வருகின்றனர். எனவே மூன்றாவது தடவையாகவும் இவர்களிடம் ஏமாறப் போகிறீர்களா என எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் பெலியத்த தேர்தல் தொகுதியில் நடைபெற்ற பிரதேச மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

“.. வரி, ஊழல், மோசடி, திருட்டு, இலஞ்சம் போன்றவற்றாலயே எரிபொருள் உள்ளிட்ட எண்ணெய் விலை அதிகரிப்புக்கு காரணம் என்றனர். இவற்றை நீக்கி எண்ணெய் விலையை குறைக்கலாம் என்று மேடைக்கு மேடை முழங்கினர். தெளிவான அதிகாரம் கிடைத்தும் இன்னும் இவற்றின் விற்பனை விலை அதிகமாகவே காணப்படுகின்றன.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எண்ணெய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். விலைச்சூத்திரத்தை இல்லாதொழிப்பம் என்றனர் அதுவும் நடக்கவில்லை. எரிபொருளுக்கான வரியை நீக்கி, கொமிஷனை நீக்கினால், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலைக்கு எரிபொருளை பெற்றுத் தருவோம் என்றனர். ஆனால் அவர்கள் கூறியது பொய்.

263,000 சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளன. தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்திலே 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், ஒருவருக்கு கூட வேலை வழங்கப்படவில்லை. வறுமையை ஒழிக்க புதிய திட்டம் ஒன்றை முன்வைப்பதாகவும் உறுதியளித்தனர், ஆனால் அதுவும் நடக்கவில்லை. பொய், மோசடி மூலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். குடும்ப வருமானம் பரவலாக குறைந்து காணப்படுகின்றன. பலர் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். 2,63,000 நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால் யாரும் அவர்களுக்கு உதவவில்லை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர் நிறுத்த பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அறிவிப்பு

2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில்,...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.