follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP1'சிறி தலதா வாழிபாடு' - நான்காம் நாள் இன்று

‘சிறி தலதா வாழிபாடு’ – நான்காம் நாள் இன்று

Published on

புனிதமான ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா வழிபாட்டின் நான்காவது நாள் இன்று (21) ஆகும்.

அதன்படி, புனித தந்த தாது காட்சி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மாலை 5.00 மணி வரை இதை நடத்த தலதா மாளிகையால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

“சிறி தலதா வாழிபாடு” எதிர்வரும் 27 ஆம் திகதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளதுடன், இதன் தொடக்க விழா கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

முதல் நாளிலிருந்து, நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் தலதா மாளிகைக்கு சென்று புனித தந்த தாதுவை வழிபட்டு வருவதுடன், அங்கு வரும் பக்தர்களின் தாகத்தைத் தணிக்க 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று (20) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமான ஸ்ரீ தலதா வழிபாடு மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.

அதன்படி, நேற்று, சுமார் 1 இலட்சத்து 50,000இற்கும் அதிகமான பக்தர்கள் புனித தந்த தாதுவை வழிபடும் பாக்கியத்தைப் பெற்றனர்.

இதேவேளை, சிறி தலதா வழிப்பாட்டுக் காலத்தில் கண்டியில் உள்ள கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ஊடகப் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்தார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகயீனம்...

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00...

ஜனாதிபதியின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்திய பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில...