follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP1சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக அதிகமான வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக அதிகமான வருமானம்

Published on

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 462 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 09 முதல் மற்றும் 19ஆம் திகதி வரையான 10 நாட்களில் மாத்திரம் மேற்படி வருமானம் ஈட்டப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டிய தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில் 1.3 மில்லியன் வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

“இம்முறை சித்திரை புத்தாண்டை முன்னிட்ட கடந்த 10ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான 10 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையில் 1.3 மில்லியன் வாகனங்கள் பயணித்துள்ளன.

அதன் ஊடாக 462 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இன்றும் பெருமளவான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைவதற்கு முன்னதாக வாகனத்தை சோதித்து, டயர் நிலைமைகள் மற்றும் வாகன சமிக்ஞை விளக்குகளின் செயற்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதேபோல அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது முன்னால் செல்லும் வாகனத்துடன் 50 மீற்றர் இடைவௌியில் பயணிக்குமாறும் இருக்கைப் பட்டையை (சீட் பெல்ட்) முறையாக அணிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், நிலவும் மழையுடனான வானிலை காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்தும் வகையிலான வேகத்தில் பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அத்தோடு உங்களது வாகனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்படுமானால் எமது அவசர தொலைபேசி இலக்கமான 1969 என்ற எண்ணுக்கு அழைக்குமாறும், இந்த தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும்”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்தார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகயீனம்...

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00...

ஜனாதிபதியின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்திய பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில...