அவதூறு, பாசாங்கு மற்றும் பொறாமையின் அடிப்படையில் மற்றவர்களை அவமதித்து அரசியலில் ஈடுபடுவதால் ஒரு நாட்டை முன்னேற்ற முடியாது என்று சர்வஜன அதிகாரத்தின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
இன்று (19) மாபோல பகுதியில் நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் ஜா-எல தொகுதிக்கான வேட்பாளர் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“உலகின் முன்னேற்றமடைந்த நாடுகள் பயன்படுத்தும் தொழில்முனைவோர் நுண்ணறிவை நாமும் பின்பற்றினால், நமது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.
நாம், ஒரு நாடாகவும், ஒரு தேசமாகவும் ஒருமித்த குரலுடன் செயல்பட வேண்டும். எவ்வித மதவாதம், இனவாதம் இன்றி, நாமெல்லாம் ஒரே குடும்பத்தினர் என்பதைக் கூற வேண்டும்.”
“இந்த தேர்தலுக்குப் பிறகு ஆரம்பிக்கவிருக்கும் சர்வஜன சபைகளின் மூலம், உங்கள் கிராமங்களிலும், உங்கள் தொகுதிகளிலும் உணரக்கூடிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கிறோம்.”
“மற்றவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் நாமே முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். அதில்தான் நமது நாட்டின் மீட்பு உள்ளது. நாட்டை முன்னேற்ற மற்றொரு வழி இல்லை.”
“பாசாங்குத்தனத்திலும் பொறாமையிலும் அடிப்படையிலான அரசியல் செயல்பாடுகள் ஒரு நாட்டை முன்னேற்ற முடியாது. உலகின் முன்னேற்ற நாடுகள் பின்பற்றிய தொழில்முனைவோர் மனநிலையை நாமும் ஏற்று செயல்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.”