இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ஓட்டங்களை எடுத்தார். தொடர்ந்து 96 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் 18 பந்தில் 23 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓட்டங்களையும் சேர்த்து (23 ஓட்டங்கள்) ஐ.பி.எல் தொடரில் படிதாரின் ஓட்டங்ககள் 1,000-ஐ கடந்தது. அவர் இதுவரை 34 போட்டிகளில் ஆடி 30 இன்னிங்சில் களம் இறங்கி 1,008 ஓட்டங்களை விளாசினார்.
இந்நிலையில், அவர் சாதனை பட்டியல் ஒன்றில் சச்சினை பின்னுக்கு தள்ளி 2வது இடம் பிடித்துள்ளார். அதாவது, ஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் அடிப்படையில் அதிவேகமாக 1,000 ஓட்டங்களை கடந்த (இந்திய வீரர்கள் மட்டும்) வீரர்கள் பட்டியலில் சச்சினை (31 இன்னிங்ஸ்) பின்னுக்கு தள்ளி படிதார் (30 இன்னிங்ஸ்) 2வது இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணிக்காக ஆடி வரும் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் (25 இன்னிங்ஸ்) முதல் இடத்தில் உள்ளார். ஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் அடிப்படையில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த (இந்திய வீரர்கள் மட்டும்) வீரர்கள் பட்டியல்:
சாய் சுதர்சன் – 25 இன்னிங்ஸ்
ரஜத் படிதார் – 30 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் – 31 இன்னிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் – 31 இன்னிங்ஸ்
திலக் வர்மா – 33 இன்னிங்ஸ்