அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அமெரிக்க வரி முறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என 28 வறுமையான மற்றும் சிறிய நாடுகளின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது.
அத்துடன் அந்த நாடுகள் தொடர்பில் பொருளாதார ரீதியில் அதிகமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இந்த 28 நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.