பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச விசாரணை குறித்து சிந்திக்கத் தயாராக இல்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச விசாரணை நிராகரிக்கப்படுகின்றமையானது முழுமையான இனவாத செயல் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.