எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்ப்பின் நிமித்தம், அந்தத் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக 22ஆம், 23ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்களிப்புகள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எனினும் தபால்மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நாட்களான 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.