follow the truth

follow the truth

April, 16, 2025
HomeTOP1முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை - துப்பாக்கிதாரி தடுப்புக்காவலில்

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை – துப்பாக்கிதாரி தடுப்புக்காவலில்

Published on

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதத் தம்மிக்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் இன்று (16) பலபிடிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்தின் பெங்கொக் நகரை நோக்கிச் செல்ல முற்பட்ட போது நேற்று (15) இவர் கைது செய்யப்பட்டார்.

அம்பலாங்கொட, குளீவத்த பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய சந்தேக நபர் தெற்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவர் கரந்தெனிய சுத்தா என்பவரின் பிரதான துப்பாக்கிதாரியாக இருந்தவர் என காவல்துறையினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

காலி, தலகஹ பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி இந்த துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை [UPDATE]

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி...

கெலிப்சோ ரயில் சேவையினூடாக அதிக வருமானம்

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக...

தேர்தல் தொடர்பில் இதுவரை 168 முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல்...