நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகளில் ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11 ஆம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளும் ஏப்ரல் 12 ஆம் திகதி காலை நிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் எந்த மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.