மாலைத்தீவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன.
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மாலைத்தீவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
பங்களாதேஷ் , பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மாலைத்தீவும் தங்கள் நாடுகளுக்குள் இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நுழைய தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.