வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் மேலும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து வீடொன்றின் கதவை தட்டியதாகவும் அதனால் கோபமடைந்த வீட்டின் உரிமையாளர் சிறுவர்களை வீட்டின் இரண்டாம் மாடியிலுள்ள அறையொன்றுக்குள் அடைத்துவைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அச்சமடைந்த சிறுவன் அறையின் ஜன்னல் வாயிலாக கீழே பாய்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.