உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் ஏற்கனவே தபால் திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.