ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துகளில் பெரும்பாலானவை வீடுகளில் இடம்பெற்றவை எனவும், அவ்வாறு 110 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
வீதி விபத்துகள் காரணமாக 94 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வருடம் பட்டாசு விபத்துகள் காரணமாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், ஏப்ரல் 13, 14 ஆகிய 2 நாட்களிலும் 2 பேர் மாத்திரமே இது தொடர்பில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.