வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அந்த மனுக்கள் மற்றும் வழக்குத் தீர்ப்புக்களின் பிரதிகளைக் குறித்த மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இதற்கு எதிராகப் பல கட்சிகள் நீதிமன்றத்தில் நீதிக்கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தன.
அந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையிலேயே வேட்பு மனுக்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், மனுக்கள் மற்றும் வழக்குத் தீர்ப்புக்களின் பிரதிகளைக் குறித்த மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கு வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.