follow the truth

follow the truth

April, 16, 2025
HomeTOP2ரிஷாத் - அதாவுல்லா சகாக்கள் சம்மாந்துறையில் மோதல்

ரிஷாத் – அதாவுல்லா சகாக்கள் சம்மாந்துறையில் மோதல்

Published on

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று (14) திங்கட்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களம் இறங்கியுள்ள, தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், அம்பாறை மாவட்டத்தில் முதலாவது தேர்தல் வன்முறை சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக எமது நிருபர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக...

இன்னும் கொஞ்ச நாளில் ஈஸ்டர் தாக்குதல் மூளையாளிகள் குறித்து தெரியவரும் – ஜனாதிபதி

ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள்...

தேர்தல் தொடர்பில் இதுவரை 168 முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல்...